Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நானும் தனுஷும்.. சுச்சிலீக்ஸ் குறித்து வாய்திறந்த அமலாபால்...

Advertiesment
நானும் தனுஷும்.. சுச்சிலீக்ஸ் குறித்து வாய்திறந்த அமலாபால்...
, செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (16:59 IST)
சுச்சிலீக்ஸ் என்ற பெயரில் இணையத்தில் வெளியான தகவல் குறித்து நடிகை அமலாபால் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
கடந்த ஏப்ரல் மாதம்,  பிண்ணனிப் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கிலிருந்து பிரபல சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தன்னுடைய டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு, அதில் புகைப்படங்கள் வெளியாகி வருவதாகவும், அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என சுசித்ரா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.  
 
அதில் தனுஷ், த்ரிஷா, விஜய் டிவி புகழ் டிடி(திவ்யதர்ஷினி) உள்ளிட்ட சில நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அதேபோல், நடிகர் தனுஷும், நடிகை அமலாபாலும் இடம்பெறும் வீடியோ வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமலாபால் “ தனுஷுடன் இணைந்து நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். பாடகி சுசித்ராவும் எனது தோழிதான். அந்த டிவிட்டர் பக்கத்தில் வெளியான செய்திகளுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறான எண்ணத்துடன் யாரோ இட்ட பதிவு அது. நான் மற்றும் தனுஷ் தொடர்புடைய வீடியோ வெளியிடப்படும் எனக் கூறப்பட்டது. நானும், தனுஷும் அந்த வீடியோவிற்காக ஆவலுடன் காத்திருந்தோம். ஆனால், அப்படி எதுவும் வெளிவரவில்லை” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிரடியாக ரைசாவை தவிர நாமினேஷன் லிஸ்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள்!