Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர்கள் அறிவாளி அல்ல..? நீங்கள் புத்திசாலியாக இருக்க வேண்டும்..! - கமல் கன்னட சர்ச்சை குறித்து ராணா கருத்து!

Prasanth K
வியாழன், 5 ஜூன் 2025 (13:34 IST)

கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் அதுகுறித்து ராணா கருத்து தெரிவித்துள்ளார். 

 

சமீபத்தில் தக் லைஃப் இசை நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், கன்னட மொழியானது தமிழ் மொழியிலிருந்து பிரிந்து வந்ததாக பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கர்நாடகாவில் பெரும் எதிர்ப்புகள் எழுந்ததால் தக் லைஃப் படத்தின் ரிலீஸ் அங்கு ஒத்திவைக்கப்பட்டது. 

 

இந்த சர்ச்சை குறித்து கமல்ஹாசன் பேசியபோது, நான் மொழியியல் வல்லுனர் கிடையாது. எனக்கு கற்றுத்தரப்பட்டதை நான் பேசினேன் என கூறியிருந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் விவகாரம் குறித்து ஒரு நேர்க்காணலில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பிரபல நடிகர் ராணா டகுபதி “மக்களும், ஊடகங்களும் புத்திசாலிகளாக மாறி, நடிகர்கள் சமூகம் வாழும் விதத்தை ஆதரிப்பவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்வது நல்ல மாற்றமாக இருக்கும். இந்த சமூகத்தை சிறப்பாக வழிநடத்த அறிஞர்கள், அரசியல்வாதிகள், கற்றறிந்த மக்கள் தேவை என்பதை நாம் உணர வேண்டும்.

 

ஒரு கவிஞரை நாம் ஒருபோதும் மேடைக்குக் கொண்டு வருவது இல்லை. மராத்தியில் ஒரு கவிஞர் அற்புதமான கவிதைகளை எழுதி இருந்தால், ஒரு நடிகரை மேடையேற்றி கௌரவிப்பது போல கௌரவிக்க மாட்டோம். நாட்டிற்கு முக்கியமான விஷயங்களை பற்றி நாம் கவனம் செலுத்துவது நல்லது” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகுப் பதுமை சமந்தாவின் கார்ஜியஸ் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஊதாப்பூ நிற சேலையில் அழகுப் பதுமையாக கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனன்!

மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் & செல்லா அய்யாவு…. செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் கட்டா குஸ்தி 2…!

ஆர்வம் காட்டாத தாணு… சிம்பு படத்தைத் தானே தயாரிக்கிறாரா வெற்றிமாறன்?

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் லோகேஷ்… ஹீரோயின் இவர்தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments