பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனால் கோலிவுட் திரையுலகம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது
நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்திலும் குணசித்திர வேடத்தில் நடித்த நடிகர் விவேக் சமூக சேவையிலும் ஈடுபட்டு இருந்தார் என்பதும் குறிப்பாக ஒரு லட்சம் மரங்கள் நடுவதில் அவர் தீவிரமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் உண்மை தொண்டனாக இருந்து அவரது வழிகாட்டுதலின்படி சேவை செய்து வந்த நடிகர் விவேக்கின் இழப்பு திரையுலகிற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே மிகப்பெரிய இழப்பு என்று கூறப்பட்டு வருகிறது