Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி: மாரடைப்பு என தகவல்

Advertiesment
நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி: மாரடைப்பு என தகவல்
, வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (12:18 IST)
காமெடி நடிகர் விவேக் அவர்களுக்கு சற்று முன் மாரடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது 
 
சற்றுமுன் வெளியான தகவலின்படி காமெடி நடிகர் விவேக் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
 
இந்த நிலையில் மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை குறித்த அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்று தடுப்பூசி, இன்று மாரடைப்பு: விவேக் மருத்துவமனையில் அனுமதி !