2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் பல கலைஞர்களுக்கு நல்ல முகவரியை தந்தது. அந்த படத்தில் கபடி வீரராக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஹரி வைரவன்.
அதன் பின்னர் குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் நன்கு வளர்ந்து வந்த நிலையில் இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு சக்கரை நோய், இதய பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகிய பிரச்சனைகள் இருந்துள்ளன. இதனால் அவர் கோமா நிலைக்கும் சென்றார். அதன் பின்னர் சிகிச்சையில் தேறிவந்த நிலையில் சில் தினங்களுக்கு முன்னர் அவர் மரணம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் அவரோடு வெண்ணிலா கபடி குழு மற்றும் குள்ளநரிக் கூட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்த விஷ்ணு விஷால் ஹரி வைரவனின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.