Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஷ்ணு விஷால் & ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் கட்டா குஸ்தி டிரைலர் ரிலீஸ்!

விஷ்ணு விஷால் & ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் கட்டா குஸ்தி டிரைலர் ரிலீஸ்!
, ஞாயிறு, 20 நவம்பர் 2022 (09:27 IST)
முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை மற்றும் ராட்சசன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’கட்டா குஸ்தி’. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும் விஷ்ணு விஷாலோடு இணைந்து தயாரிக்கிறார். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனது. இதையடுத்து இந்த படம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டு இளைஞருக்கும் கேரள பெண்னுக்கும் இடையே நடக்கும் திருமணம் மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை சுற்றி உருவாக்கப் பட்டுள்ள கதையாக அமைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யசோதா வெற்றி… நன்றி தெரிவித்து சமந்தா உருக்கமான பதிவு!