இருவரும் பதவி விலகுங்கள்...உங்கள் ஈகோவுக்கு சங்கம் முடங்கவேண்டுமா? - கருணாஸ் !

Webdunia
வியாழன், 12 செப்டம்பர் 2019 (19:00 IST)
தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடத்தின் வளர்ச்சியை தடுக்கும் வேலைகளை மறைமுகமாக இருந்துகொண்டு செயல்பட்டு வரும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உடனடியாக பதவி விலக வேண்டும் என நடிகரும் எம். எல்.ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார். 



 
பழனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், யாராக இருந்தாலும் அவரவரின் சொந்த ஈகோவை விட்டுவிட்டு பொது பிரச்னையை தீர்க்க முன் வர வேண்டும். ஐசரி கணேசனுக்கும் , நடிகர் சங்கத்தின் பொது செயலாளராக  போட்டியிட்டிருக்கும் விஷால் அவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்னையை விட்டு விட்டு சங்கத்தின் நலன் கருதி இருவரும் உடனடியாக ஒரு உறுதியான முடிவை எடுக்கவேண்டும். இல்லையேல் இருவரும் சங்கத்தை விட்டு விலகி இருக்கவேண்டும். 
 
மேலும் நடிகர் சங்கத்தின் முன்னேற்றத்திற்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பின்னிருந்துக்கொண்டு பல வேலைகளை செய்து கட்டிடம் திறப்பட்டதற்கு தடையாக இருந்து செயல்பட்டு வருகிறார். தற்போது நடிகர் சங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தான் அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கையாக இருக்கிறது. எனவே அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள பிரச்னை நீண்டுகொண்டே போனால் இருவரும் உடனடியாக பதவி விலகவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.     

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments