Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு பள்ளிக்கு Android TV வழங்கிய நடிகர் விஷால்!

Advertiesment
அரசு பள்ளிக்கு  Android TV வழங்கிய நடிகர் விஷால்!
, திங்கள், 16 அக்டோபர் 2023 (09:04 IST)
நடிகர் விஷால் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சியாக ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகள் இல்லம், மாணவ, மாணவியர்கள் மற்றும் மக்களுக்கு பயன்பெறும் வகையில் நலத்திட்ட, நற்பணி விழாக்களை ஏற்பாடு செய்து  வந்தனர்


 
அதன் அடிப்படையில் மத்திய சென்னை மாவட்டம் புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு A.I.W.C உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு நல திட்ட நற்பணி விழா நடைபெற்ற போது. அப்பள்ளியின் நிர்வாகத்தின் கோரிக்கையாக நடிகர் விஷால் அவர்களுக்கு பள்ளி மாணவ, மாணவியர்கள் தொலைநோக்கு பாடத்திட்டங்களை கற்பதற்கு தொலைக்காட்சி (Android TV) தேவைப்படுகிறது. ஏற்கனவே எங்கள் பள்ளியில் செயல் பட்டு வந்த தொலைக்காட்சி (Android TV) திருடப்பட்ட நிலையில் அருகில் உள்ள காவல் துறையில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை,

அரசு தரப்பிலும் எந்த பொறுப்பும் இல்லை, எனவே உங்களுடைய தேவி அறக்கட்டளை சார்பில் தொலைக்காட்சி (Android TV) வேண்டி கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அக்கோரிக்கை நடிகர் விஷால் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று உடனே நடிகர் விஷால் அவர்கள் அப்பள்ளிக்கு பெரிய தொலைக்காட்சி (Android TV) வழங்கியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 மொழிகளில் வெளியாகிறது "hi நான்னா" திரைப்படம்!