Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 2க்கு பின் நீயா நானானுக்கு பாத்துக்கலாம்! தமிழ் ராக்கர்ஸ்க்கு விஷால் சவால்

Webdunia
வியாழன், 9 மார்ச் 2017 (07:25 IST)
கோலிவுட்டில் இப்போதைய தலையாய பிரச்சனை தமிழ் ராக்கர்ஸ்தான், முதலில் ரிலீஸ் ஆன மறுநாள் அல்லது ரிலீஸ் ஆன மாலை புதுப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ் தற்போது ஃபேஸ்புக் லைவ் மூலம் முதல் நாள் முதல் காட்சியின்போதே திருட்டுத்தனமாக வெளியிட்டு அதிர்ச்சி அளித்து வருகிறது.


 


தமிழ் ராக்கர்ஸ் யார்? எங்கிருந்து செயல்படுகிறார்கள் என்று நெருங்க முடியாத நிலையில் தொடர்ந்து திருட்டு டிவிடிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் விஷால் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழா ஒன்று தமிழ் ராக்கர்ஸ்க்கு விஷால் சவால் விடுத்துள்ளார்/

இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கிய 'சிம்பா' பட இசை வெளியீட்டில் கலந்து கொண்ட விஷால் பேசியதாவது:  'தடைகளை தாண்டி ரிலீஸ் ஆகும் எந்த படமும் கண்டிப்பா வெற்றி பெரும். தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கு பின் தான் இந்த படம் வெளியாகும். அந்த சமயத்தில் இந்த படம் எந்த இணையதளத்திலும் வெளியாகாது என நான் உறுதியா சொல்கிறேன். ஏப்ரல் 2க்கு பின் நீயா நானானுக்கு பாத்துக்கலாம்' என்று ஆவேசமாக சவால் விடுத்தார். இந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் மிஷ்கின், காந்திகிருஷ்ணா, வெங்கட் பிரபு நடிகர்கள் விஷால், ஜெயம் ரவி, பிரசன்னா, பிரித்வி பாண்டியராஜன், அரவிந்த், அஜய், நடிகைகள் சினேகா, தன்ஷிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் சித்தார்த் நடிக்கும் 40வது படம்.. டைட்டில் டீசர் வீடியோ ரிலீஸ்..!

க்யூட்டோ க்யூட்… ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

இன்னும் கல்யாண குஷி முடியல போல… ஆடிப்பாடி கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்!

'விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு கூடுதல் காட்சிகள்.. தமிழக அரசு அனுமதி..!

பூமியை அழிக்க வந்துவிட்டார் கேலக்டஸ்! ஒரு புது சூப்பர்ஹீரோ டீம் - Fantastic Four அதிரடி தமிழ் டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments