Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தை சந்தித்ததால் ஆத்திரம் அடைந்த விஜய்சேதுபதியின் மனைவி

Webdunia
வியாழன், 9 மார்ச் 2017 (01:05 IST)
அஜித் பெரும்பாலும் தானாக முன்வந்து யாரையும் சந்தித்தது கிடையாது. அஜித்தை சந்திக்க விருப்பமுள்ளவர்கள் அணுகினால் அவர் சம்மதம் தெரிவிப்பார்


 


இந்நிலையில் சமீபத்தில் 'விவேகம்' படத்தின் சென்னை படப்பிடிப்பின்போது அஜித் தனது உதவியாளரை அழைத்து விஜய்சேதுபதியை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினாராம்.

அஜித்திடம் இருந்து அழைப்பு வரவே உடனடியாக 'விவேகம்' படப்பிடிப்பு தளத்திலேயே அஜித்தை சந்தித்தாராம். இந்த சந்திப்பில் அஜித் விஜய்சேதுபதியிடம், 'நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறீர்கள். உங்கள் தன்னம்பிக்கை எனக்கு பிடித்திருக்கிறது. அடுத்தவர்களுக்கும் நீங்கள் உதவி செய்வதாக கேள்விப்பட்டேன். எக்காரணம் கொண்டும் இந்த மூன்றையும் விட்டுவிடாதீர்கள் என்று அறிவுரை செய்தாராம்.

அஜித்-விஜய்சேதுபதியின் இந்த சந்திப்பு குறித்து கேள்விப்பட்ட விஜய்சேதுபதியின் மனைவி கடும் ஆத்திரம் அடைந்தாராம். ஏனெனில் விஜய்சேதுபதியின் மனைவி ஒரு தீவிர அஜித் ரசிகை என்றும், அஜித்திடம் இருந்து அழைப்பு வந்ததும் ஏன் தன்னை அழைத்து செல்லாமல் தனியாக சென்றீர்கள் என்றும் கணவரிடம் கோபித்து கொண்டாராம். இருப்பினும் விரைவில் அஜித்திடம் அழைத்து செல்வதாக விஜய்சேதுபதி வாக்கு கொடுத்துள்ளாராம். விஜய்சேதுபதி மனைவியின் ஆசையை அஜித் எப்போது நிறைவேற்றுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குத்துப் பாட்டு என்றாலே உற்சாகம்தான்… கூலி படத்தில் நடனமாடியது ஏன்? – பூஜா ஹெக்டே பதில்!

பணத்திற்காக ஆபாச படங்களில்..? இப்போ தலைவர் பதவிக்கு ஆசையா? - நடிகை ஸ்வேதா மேனன் மீது பகீர் புகார்!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படம் தொடங்குவதில் மீண்டும் தாமதம்… பின்னணி என்ன?

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா?... எந்த படத்தில் தெரியுமா?

கூலி படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்காது… தயாரிப்பாளர் தனஞ்செயன் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments