கேரளாவின் முன்னாள் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலமானார். அவருக்கு வயது 79.
இந்நிலையில் அவரை மறைவை ஒட்டி கேரள அரசு மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கும் நாட்களாக அறிவித்தது. இதைக் கடுமையாக விமர்சித்து மலையாள நடிகர் விநாயகன் வீடியோ ஒன்றில் பேசியிருந்தார்.
அதில் “யார் இந்த உம்மன் சாண்டி. அவர் இறந்தது எதற்கு துக்கம் அனுசரித்து விடுமுறை விட வேண்டும். அவரை நல்லவர் என்று நீங்கள் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் நான் சொல்ல மாட்டேன்.” எனக் கூறியிருந்தார். அவரின் பேச்சு சர்ச்சையானதை அடுத்து வீடியோவை நீக்கினார்.
இந்நிலையில் கேரள மாநில காங்கிரஸ் சார்பாக புகார் அளிக்கப்பட்டு தற்போது விநாயகன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.