Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜயகாந்த்தின் உடல்நிலை...!

Actor Vijaykanth s health
Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (16:24 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை கோளாறு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பதும் அதன் பின்னர் பூரண குணமானார்.

நடைபெற்று முடிந்த சட்டசபைத்தேர்தல் பிரசாரத்தில் ஒரு வார்த்தையும் அவர் பேசவில்லை எனக் கூறப்பட்டது. அண்மையில் கூட மியாட் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில், சமீபத்தில் விஜயகாந்த் தனது வீட்டில் எளிமையான முறையில் பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு பிரபல தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில். உடல்நலக்குறைவால் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைஅக்ள் செய்துவரும் விஜயகாந்த், தற்போது மேல்ச் சிகிச்சைக்கான அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, இன்று காலை சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து, இளைய மகன் சண்முக  பாண்டியனுடன்  துபாய் வழியாக அமெரிக்கா சென்றார் நடிகர் விஜயகாந்த்.
அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தால் அங்குச் செல்ல முடியாமல் இருந்த விஜயகாந்த், சக்கர நாற்காலியில் இன்று தனது முகத்தை மறைத்தபடி சென்றார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments