Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நிவாரண உதவி! ரசிகர்களுக்கு விஜய் மூலம் சென்ற பணம்!

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (11:05 IST)
நடிகர் விஜய் தனது ரசிகர்களில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார்களான அஜித் மற்றும் விஜய் இருவரும் 2.5 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி அளித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் அத்தோடு நில்லாமல் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய ரசிகர்களுக்கு உதவும் விதமாக தலா 5 ஆயிரம் ரூபாயை தனது விஜய் சேரிட்டபிள் ட்ரஸ்ட் மூலம் ரசிகர்களின் வங்கிக் கணக்குக்கே அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது சம்மந்தமாக ரசிகர்கள் தங்களுக்கு பணம் வந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்க்ரீன்ஷாட்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments