Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதிராஜா மகன் மறைவுக்கு விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்திற்கு வருகை..!

Siva
புதன், 26 மார்ச் 2025 (09:36 IST)
நடிகர் மனோஜின் மறைவுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ், மாரடைப்பால் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மரண செய்தி திரையுலகத்திலும், அரசியல் வட்டாரங்களிலும் ஆழ்ந்த துயரை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னையின் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய், பாரதிராஜாவின் நீலாங்கரை இல்லத்துக்கு நேரில் சென்று, மனோஜின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் சிவகுமார், பிரபு, சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், வி.கே. சசிகலா, நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு 49 படத்தின் ஷூட்டிங்குக்காக வட இந்தியாவில் முகாமிடும் படக்குழு!

மனோஜ் பாரதிராஜாவுக்கு இதயத்தில் என்ன பிரச்சனை?.. ஒரு மாதமாக நடந்த சிகிச்சை!

நடிகர் மம்மூட்டிக்கு பெருங்குடல் புற்றுநோயா..? பிரபல நடிகரின் பதிவு!

எம்புரான் படத்துக்கு சென்னையில் அதிகக் காட்சிகள்.. மாஸ் காட்டும் மோகன்லால் & பிருத்விராஜ் கூட்டணி!

‘சிங்கம் பெத்த பிள்ளையின்னு’ உனக்குப் பாடல் எழுதினேன் –மனோஜுக்கு வைரமுத்து அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments