Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாய் மழையில் சிக்கி கொண்டாரா நடிகர் விஜய்? வாக்களிக்க வருவாரா?

Siva
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (08:43 IST)
நடிகர் விஜய் வாக்களிப்பதற்காக ரஷ்யாவில் இருந்து கிளம்பிய நிலையில் அவர் துபாயில் சிக்கிக் கொண்டதாகவும் அதனால் அவர் வாக்களிக்க வருவதில் காலதாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’கோட்’ படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்ற நிலையில் நேற்று அவர் ரஷ்யாவில் இருந்து ஓட்டு போடுவதற்காக கிளம்பியதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சென்னை வந்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி விஜய் துபாயில் சிக்கிக் கொண்டதாகவும் துபாயில் பெய்து வரும் காண மழை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர் இன்னும் துபாயில் தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து இன்று விமான சேவையை பொருத்து விஜய் சென்னை வருவார் என்றும் காலதாமதமாக வந்தாலும் மாலை ஐந்து மணிக்குள் அவர் வந்துவிட்டால் கண்டிப்பாக தனது வாக்கை செலுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சில பேர் செட்ல மைக்கக் கூட உடைப்பாங்க… ஆனா லோகேஷ்? –ஸ்ருதிஹாசன் ஆச்சர்யம்!

திரைக்கு வெளியிலான தோற்றத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.. அதுக்குக் காரணம் அவர்கள்தான் –மாதவன் கருத்து!

‘காந்தாரா 2’ படத்தில் ருக்மிணி வசந்தின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திய படக்குழு!

A சான்றிதழ் கண்டிப்பாகக் கூலி படத்தின் வசூலைப் பாதிக்கும்.. பிரபல தயாரிப்பாளர் பதில்!

நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் படுகொலை.. சிறிய தகறாரால் விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments