Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன ஆனது தனுஷ் & இளன் இணையும் படம்… இயக்குனர் கொடுத்த அப்டேட்!

vinoth
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (07:50 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த காதல் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை யுவன் தயாரிக்க புதுமுக இயக்குனர் இளன் இயக்கி இருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் யுவன் , கவின் மற்றும் இளன் கூட்டணியில் ’ஸ்டார்’ படம் உருவாகி மே மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதற்கிடையில் இயக்குனர் இளன் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்தது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால் அவர்களுக்கு கதையில் திருப்தி இல்லாததால் தயங்கியுள்ளனர். ஆனால் கதையில் முழு நம்பிக்கை வைத்த தனுஷ் அதே கதையை பைனான்சியரும் தயாரிப்பாளருமான மதுரை அன்பு செழியனிடம் சொல்லி அவரை தயாரிக்கும் படி சொல்லி சம்மதம் வாங்கியுள்ளாராம். ஆனால் அவரும் கைவிரித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் கைவிடப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் இளன் அந்த படம் பற்றி பேசியுள்ளார். அதில் “தனுஷ் சாருக்கு அந்த கதையில் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. அந்த படத்தின் பட்ஜெட் மிக அதிகம். அதனால் சரியான தயாரிப்பாளருக்குக் காத்திருக்கிறோம். கூடிய சீக்கிரம் அந்த படம் நடக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments