Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 68 படத்தில் வெங்கட்பிரபு டீமில் இருந்து இணையும் பிரபல நடிகர்!

தளபதி 68 படத்தில் வெங்கட்பிரபு டீமில் இருந்து இணையும் பிரபல நடிகர்!
, சனி, 9 செப்டம்பர் 2023 (09:53 IST)
விஜய்  லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.

இந்த படத்துக்காக விஜய்யின் உருவத்தை 3டி யில் ஸ்கேன் செய்ய அமெரிக்காவில் உள்ள ஒரு ஸ்டுடியோவுக்கு சென்றது படக்குழு. அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன.

இந்த படத்தில் நடிக்கும் நடிகைகள் பற்றி எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் சினேகா, பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது வெங்கட் பிரபுவின் நெருங்கிய நண்பரான நடிகர் வைபவ் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் 7-ல் போட்டியாளராக கலந்துகொள்ளும் குக் வித் கோமாளி பிரபலம்!