இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்றும் படம் வரும் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் டீசர் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகி பரவலான கவனம் பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தில் இரண்டாவது பாடலை வித்தியாசமாக படக்குழுவினர் வித்தியாசமான முறையில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் சூரரைப் போற்று படத்தின் இரண்டாவது பாடலான ’வெய்யோன் சில்லி’ இன்று வெளியிடவுள்ளது.
அதில், Speice jet 737 என்ற போயிங் விமானத்தில் 70 சிறுவர்கள் மத்தியில் இப்பாடல் வெளியிடப்படவுள்ளது. இவர்கள் அனைவருமே அரசுப் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.