Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரவிந்த் சாமிக்கு வில்லன் யார் தெரியுமா?

அரவிந்த் சாமிக்கு வில்லன் யார் தெரியுமா?
, வெள்ளி, 2 ஜூன் 2017 (17:57 IST)
அரவிந்த் சாமி நடிக்கும் புதிய படத்தில், வில்லனாக சுந்தீப் கிஷண் நடிக்கிறார்.


 

 
‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கும் படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் நடிக்கிறார். கார்த்திக் நரேன் மற்றும் இயக்குநர் கெளதம் மேனன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
 
இந்தப் படத்தில், நாக சைதன்யா நடிப்பதாக இருந்தது. அரவிந்த் சாமிக்கு வில்லனாக அவர் நடிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், கால்ஷீட் பிரச்னையாலும், அக்டோபரில் திருமணம் என்பதாலும் அவர் இந்தப் படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அவருக்குப் பதிலாக, ‘மாநகரம்’ படத்தில் நடித்த சுந்தீப் கிஷண் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடிக்கடி வதந்தியில் சிக்கும் ‘பாகுபலி’ நாயகன்..