Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (15:18 IST)
நடிகர் ஸ்ரீமன் விஜய்யின் வாரிசு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் படப்பிடிப்பு தொடங்கியது முதலே அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ துணுக்குகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதைத் தடுப்பதற்காக இப்போது இயக்குனர் வம்சி படப்பிடிப்புத் தளத்துக்குள் யாருமே செல்போன் எடுத்து வரக்கூடாது என ஸ்ட்ரிட்க்காக தடை உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.

இந்நிலையில் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் நிலையில் மற்றொரு நடிகரான ஸ்ரீமன் தற்போது படத்தில் ஒரு வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் விஜய்யுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

பா ரஞ்சித் படத்தில் கதாநாயகியான நாக சைதன்யாவின் மனைவி!

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments