Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பஞ்சதந்திரம் பார்ட் 2 வருமா? ஐங்குறுந்தாடிகளில் ஒருவரின் பதில்!

Advertiesment
பஞ்சதந்திரம் பார்ட் 2 வருமா? ஐங்குறுந்தாடிகளில் ஒருவரின் பதில்!
, திங்கள், 7 ஜூன் 2021 (13:21 IST)
பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்று அந்த படத்தில் நடித்திருந்த நடிகர் ஸ்ரீமன் கருத்து தெரிவித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு கமல், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், யூகி சேது, ஜெயராம், ஸ்ரீமன் மற்றும் ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பஞ்சதந்திரம். ஹாலிவுட் படமான வெரி பேட் திங்ஸ் படத்தின் தழுவலில் இந்த படம் உருவாக்கப்பட்டது. கமலும் கிரேசி மோகனும் இணைந்து படத்தின் கதை வசனத்தை எழுதி இருந்தனர். திரையரங்க வெளியீட்டின் போது பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், அதன் பின்னர் இந்த படம் ஒரு நகைச்சுவை படங்களுக்கு என ஒரு பெஞ்ச் மார்க் படமாக அமைந்து இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் பார்ட் 2 வருமா எனக் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு அந்த படத்தின் நடிகர்களுள் ஒருவரான ஸ்ரீமன் பதிலளித்துள்ளார். அதில் ‘எனக்கும் அது குறித்த ஆவல் உள்ளது. அந்த படம் வரவேண்டும் என கமல் சார் நினைத்தால் கண்டிப்பாக வரும்.’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகைக்கு தொடையில் முத்தம் கொடுத்த இயக்குனர் ராம்கோபால் வர்மா!