Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் சார்.. எங்காத்தா மீனாட்சி குணப்படுத்துவா..! – நடிகர் சூரி ட்வீட்!

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (11:38 IST)
சமீப காலமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் குணமடைய வேண்டி நடிகர் சூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் ஓய்வில் உள்ளார். கட்சியின் முக்கியமான ஆலோசனை கூட்டங்களில் அவர் பங்கேற்றாலும் எதுவும் பேசாமல் அமர்ந்தே இருப்பார். சமீப காலமாக அவரது உடல்நிலை மோசமாகியுள்ளதாக கூறப்பட்டது.

சில நாட்களுக்கு முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு சர்க்கரை அளவு அதிகரித்ததன் காரணமாக கால் விரல்களில் மூன்றை அகற்றியுள்ளனர். இதை தொடர்ந்து விஜயகாந்தை நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்த உடல்நலம் குணம் பெற வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சூரி “தங்கமான மனுசன், உதவின்னு யார் கேட்டாலும் வாரிவழங்கிய கர்ணன்; ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எல்லாருக்குமான அண்ணசத்திரமா இருந்துச்சு! கேப்டன் விஜயகாந்த் சார், நீங்க செய்த புண்ணியமும் எங்காத்தா மீனாட்சி அம்மனும் உங்களை விரைவில் குணப்படுத்தும்!” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனில் ‘நான் ஆணையிட்டால்’ ரீமேக் பாடல்? எம்ஜிஆர் யுத்தியை கையில் எடுக்கும் விஜய்!?

வெண்னிற கௌனில் கலக்கலான போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!

மாடர்ன் ட்ரஸ்ஸில் க்ளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷி கண்ணா!

ஜெயம் ரவி & கணேஷ் கே பாபு இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்து வெளியான அப்டேட்!

தனுஷ் - நயன்தாரா வழக்கு: நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments