Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகை… பூஜையோடு தொடங்கிய ஷூட்டிங்!

சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகை… பூஜையோடு தொடங்கிய ஷூட்டிங்!
, வெள்ளி, 20 ஜனவரி 2023 (09:04 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சூரி தற்போது விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ள நிலையில் அடுத்தடுத்தும் சூரியை கதாநாயகனாக வைத்து படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒரு படத்தை கூழாங்கல் என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்க, சிவகார்த்திகேயன் அந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜையோடு தொடங்கியது. இந்த படத்தில் மலையாள நடிகையான அன்னா பெண் கதாநாயகியாக நடிக்கிறார்.

சூரி கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படத்தை இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போ? வெளியான லேட்டஸ்ட் தகவல்!