Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவில்கள் பத்தி நான் தப்பா எதுவும் சொல்லல!? – நடிகர் சூரி விளக்கம்!

கோவில்கள் பத்தி நான் தப்பா எதுவும் சொல்லல!? – நடிகர் சூரி விளக்கம்!
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (09:42 IST)
விருமன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் விருமன். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் சூர்யாவின் கல்வி அறக்கட்டளை குறித்து பேசிய நடிகர் சூரி “நீங்கள் சம்பாதிக்கும் காசுக்கு சாப்பாடோ கஞ்சியோ குடித்துவிட்டு சும்மா இருந்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் தாண்டி பல குழந்தைகளை படிக்க வைத்து மிகப்பெரும் செயலை செய்துள்ளீர்கள். ஆயிரம் கோவில்கள் கட்டுவதை விட, அன்னச்சத்திரம் கட்டுவதை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது” என்று கூறினார்.

கோவில்கள் குறித்த அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகள் சில கண்டனம் தெரிவித்து வந்தன. இந்நிலையில் மதுரையில் இதுகுறித்து பேசிய நடிகர் சூரி “நான் எப்போதும் மீனாட்சி அம்மனை குறிப்பிட்டுதான் பேசுவேன். மீனாட்சி அம்மன் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால்தான் எனது உணவகங்களுக்கு அம்மன் என பெயர் வைத்துள்ளேன்.

நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது. அதேசமயம் நான் படிக்காதவன், அதனால் படிப்பின் அவசியம் எனக்கு தெரியும்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விருமன் படத்தில் அதிதி பாடிய ‘மதுர வீரன்’ பாடல்… அதிருப்தியில் பிரபல பாடகி!