Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை மீனாவின் வீட்டை விலைக்கு வாங்கிய சூரி - எத்தனை கோடிக்கு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (13:27 IST)
தமிழ் சினிமாவின் காமெடிய நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். தனது யதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா போன்ற முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார். சூரி வளர்ந்து வந்த நேரத்தில் டாப் காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே இறக்கிவிட்டார். 
 
பின்னர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் துவங்க திட்டமிட்ட சூரி மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்திருந்தார். இப்படி சினிமா தொழில் கையில் இருந்தாலும் சைடு பிசினஸ் போன்று தனக்கு பிடித்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை மீனாவின் வீட்டை சூரி விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. 
 
சென்னை சாலிகிராமத்தில் நடிகை மீனாவுக்கு சொந்தமான வீடு ஒன்றை விலைக்கு விற்க திட்டமிட்டிருந்ததை அறிந்த பலர் அந்த வீட்டை வாங்க முன்வந்தனர். ஆனால் வர்கள் எல்லாரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு நடிகர் சூரி இந்த வீட்டை  ரூ. 6.5 கோடிக்கு வங்கியுள்ளாராம். சினிமாவில் நுழைந்த ஒரு சில வருடத்திலே நடிகை மீனாவின் வீட்டை வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ள சூரியின் வளர்ச்சியை கண்டு கோலிவுட் வாய்பிளந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

தயாரிப்பாளர் லலித் மகன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு இதுதானா?... கதை ‘மைனா’ மாதிரி இருக்கே!

அடுத்த கட்டுரையில்
Show comments