போதும் சார்ணு சொல்ற அளவு செல்பிக்கு போஸ் கொடுக்கறாரு மனுசன்

சனி, 16 பிப்ரவரி 2019 (19:42 IST)
நடிகர் சிவக்குமார்  தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் குணசித்திர நடிகராகவும் 30 வருடங்களுக்கு மேல் கலக்கி கொண்டிருந்தவர்.


 
இப்போது அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி மாஸ் ஹீரோக்களாக மாறிவிட்டதால் நடிப்பதில் இருந்து ஒதுங்கிவிட்டார். சிறந்த ஓவியரான சிவக்குமார், ஆன்மீகத்திலும், யோகாவிலும் ஈடுபாடு கொண்டவர்.  மற்ற நடிகர்களுக்கு மத்தியில் எந்த சர்ச்சையில் சிக்காமல் சிறந்த பக்குவமான மனிதர் என பெயர் எடுத்தவர்.
 
இவர் அண்மை காலங்களில் செல்பி எடுக்க வந்தவர்களின் செல்போனை தட்டிவிட்டதால் விமர்சனத்துக்கு உள்ளாகி வந்தார்.
 
சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்டது வைரலானது. அதன்பின் அதே போன்ற ஒரு நிகழ்வு கடந்த வாரம் நடந்தேறியது.
 
இதனால் செல்பியை வெறுக்கும் சிவக்குமார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலும் அதிகமாக இருந்தது.  தற்போது இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக ரசிகர் ஒருவருடன் செல்பியை தாண்டி வீடியோவே எடுத்து கொண்டுள்ளார் சிவக்குமார்.  இது தொடர்பாக சூர்யா ரசிகர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், தட்டி விடும் போது திட்டுன யாரும் இப்ப பாராட்டுகிறார்களா ? போதும் சார்னு சொல்ற அளவு செல்பிக்கு போஸ் கொடுக்கறாரு மனுசன் #Sivakumar அய்யா என கூறியுள்ளனர். 
 
டுவிட்டர் லிங்க் 
 
https://twitter.com/PageSuriya/status/1096709495114235907

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நடிகை யாஷிகா தற்கொலை! தேடப்பட்ட காதலன் போலீசில் சிக்கினார்!