Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் !

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் !
, புதன், 21 ஜூலை 2021 (16:57 IST)
தமிழ் சினிமாவில் காலத்தால் மறக்கமுடியாத நடிகர் சிவாஜி கணேசன். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் பாராசக்தி படத்தில் அறிமுகமான சிவாஜி கணேசனுக்கு திரையுலக வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை.

ஆனால் தன் முயற்சியில் எல்லைகளைச் சுறுக்கிக் கொள்ளாமல் தன் சிறு வயதில் ஆழங்கால் பட்ட வறுமையிலும் நாடகங்களில் பேசப்படும் மிக நீண்ட வசனங்களை எல்லாம் உச்சரிப்புடன், அழுத்தம் திருத்தமாகப் பேசப் பயிற்சியெடுத்து,  எதிர்காலத்தில் நடிப்புச் சக்ரவர்த்தியாவதற்கான முன் ஒத்திகைகளை அப்போது எடுத்துக் கொண்டிருந்தார் சிவாஜி.

சந்தர்பசூழ்நிலையில் பேரறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்ற நாடகத்தில்ம் முன்னாள் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டாரும் முதல்வருமான எம்.ஜி.ஆர் நடிக்க முடியாமல் போகவே, அந்த வாய்ப்பை உடுப்புப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டு நடிப்பில் அசத்தினார். அவரது மேடை நாடக உத்தி, மற்றும் நடிப்பு, வசனப் பிரவாகத்தைப் பார்த்த தந்தைப் பெரியார் அவருக்கு சிவாஜி கணேசன் என்று பெயர்சூட்டினார்.

பின்னர் பராசக்தி படத்தில் அறிமுகமாகி தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்து நட்சத்திர அந்தஸ்து பெற்றார். 283  படங்களில் நடித்து ச் செவாலியே விருதும் பெற்றார். இன்று அவரது 20 வது நினைவுநாளை முன்னிட்டு சினிமாநடிகர்கள், கலைஞர்கள் ரசிகர்கள், உள்ளிட்டோர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதனால்தான் பாலிவுட்டை நான் சாக்கடை என்கிறேன் – கங்கனா கோப டிவீட்!