பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார். 2023 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகி மூன்றுமே ஹிட்டாகின.
ஹாட்ரிக் கொடுத்த ஷாருக் கான் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை அறிவிக்கவில்லை. அதனால் 2024 ஆம் ஆண்டு அவரின் எந்த படமும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் அவர் கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க, ஷாருக்கின் மகள் சுஹானா நடிகையாக அறிமுகமாகிறார்.
இந்நிலையில் ஷாருக் கான் அடுத்து புஷ்பா இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. சுகுமார், அடுத்து ராம்சரண் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தை முடித்ததும் அவர் ஷாருக் கானோடு இணைந்து பணியாற்றலாம் என சொல்லப்படுகிறது.