Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நாளில் ரிலீஸாகும் சசிகுமாரின் இரண்டு படங்கள்!

ஒரே நாளில் ரிலீஸாகும் சசிகுமாரின் இரண்டு படங்கள்!
, திங்கள், 1 நவம்பர் 2021 (11:21 IST)
நடிகர் சசிகுமார் நடித்துள்ள கொம்பு வச்ச சிங்கமடா மற்றும் ராஜவம்சம் ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார் நடித்த திரைப்படங்கள் வரிசையாக ரிலீஸாகி கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.  குறிப்பாக உடன்பிறப்பே என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் வரும் தீபாவளி அன்று அவர் நடித்த எம்ஜிஆர் மகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதையடுத்து நவம்பர் மாதத்திலேயே அவரின் வேறு இரு திரைப்படங்கள் ரிலீஸாகின்றன. அதுவும் ஒரே நாளிலேயே. ராஜவம்சம் மற்றும் கொம்பு வச்ச சிங்கமடா ஆகிய இரண்டு படங்களும் முடிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாகும் நிலையில் அவ்விரு படங்களும் நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பட்டியலில் ஹென்றி கேவில்!