யாத்திசை இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சசிகுமார்!

vinoth
செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (10:53 IST)
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான யாத்திசை  திரைப்படம் படம் ‘பொன்னியின் செல்வன் 2’ என்ற பிரம்மாண்டமான படத்துக்கு ஒருவாரம் முன்னதாக திரையரங்குகளில் வெளியானது. சோழர்களின் வரலாற்றை சொல்லும் பொன்னியின் செல்வனும், பாண்டியர்களின் வரலாற்றை சொல்லும் யாத்திசையும் மோதிக்கொண்டுள்ளது.

மிகக்குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான கதையாக்கம் மற்றும் மேக்கிங்கில் சிறப்பாக இருந்ததால் கணிசமான ரசிகர்களைக் கவர்ந்தது. அதன் பின்னர் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல கவனத்தைப் பெற்றது. இதன் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் தரணி ராசேந்திரன் தற்போது சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜே.கே ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்கிறது. இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்ட காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகவுள்ள இந்த படத்தில் INA அதிகாரியாக சசிகுமார் நடிக்கிறாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70 சதவீதம் நடந்து முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சேயோன், பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

Bigg Boss Season 9 Tamil: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்?

எனக்கு விருது கொடுத்தால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவேன்: விஷால்

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் ஸ்டார் ப்ரதீப்! Dude படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்!

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments