சரவணனும் இரண்டாவது மனைவியும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்… முதல் மனைவி புகார்!

vinoth
வியாழன், 4 செப்டம்பர் 2025 (12:55 IST)
தமிழ் சினிமாவில் 90 களில் கதாநாயக நடிகராக அறிமுகமான சரவணன் ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் அவருக்குத் திருப்புமுனையாக ‘பருத்திவீரன்’ படம் அமைந்தது.

இந்த படத்தில் நடித்த கார்த்தி, பிரியாமணி, சரவணன் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டனர். படத்தில் சித்தப்பா – மகன் காம்பினேஷனில் சரவணனும் கார்த்தியும் கலக்கி இருப்பார்கள். அதன் பிறகு அந்த கூட்டணி வேறு எந்த படத்திலும் இணைந்து நடிக்க வில்லை.

ஆனாலும் சரவணன் அதன் பின்னர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. அந்த வாய்ப்பை அவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சரவணன் மீது அவரின் முதல் மனைவி சூர்யா ஸ்ரீ ஆவடி போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அதில் “சரவணன் சினிமாவில் ஜெயிக்காத போதே அவருக்கு துணையாக இருந்தேன்.  அவருக்க நான் இரண்டாவது திருமணமும் செய்து வைத்தேன். ஆனால் இப்போது சரவணனும் அவரது இரண்டாவது மனைவியும் சேர்ந்து என்னை அடித்து மிரட்டிக் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.” எனப் புகாரளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படத் தொகுப்பு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஏழைக்கு கோபம் வந்தால் நேரடியாக அடிப்பான்; ஆனால், பணக்காரனுக்குக் கோபம் வந்தால்.. கவினின் ‘மாஸ்க்’ டிரைலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments