Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“நான் சொன்னத அவரு கேக்கல… இல்லன்னா வேற மாதிரி வந்துருப்பாரு” – நடிகர் சரவணன் குறித்து இயக்குனர் அமீர்!

Advertiesment
“நான் சொன்னத அவரு கேக்கல… இல்லன்னா வேற மாதிரி வந்துருப்பாரு” – நடிகர் சரவணன் குறித்து இயக்குனர் அமீர்!
, வியாழன், 30 நவம்பர் 2023 (10:25 IST)
2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி கார்த்தி நடிகராக அறிமுகமான பருத்தி வீரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவாஜி கணேசனுக்கு பிறகு முதல் படத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாயகனாக கார்த்தி மாறினார். இந்த படத்தில் நடித்ததற்காக பிரியா மணிக்கு தேசிய விருது கிடைத்தது.

இந்த படத்தில் நடித்த கார்த்தி, பிரியாமணி, சரவணன் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டனர். படத்தில் சித்தப்பா – மகன் காம்பினேஷனில் சரவணனும் கார்த்தியும் கலக்கி இருப்பார்கள். அதன் பிறகு அந்த கூட்டணி வேறு எந்த படத்திலும் இணைந்து நடிக்க வில்லை.

பருத்திவீரன் வெற்றி பெற்றபின்னர் இயக்குனர் அமீரை சந்தித்துள்ளார் சரவணன். அப்போது அமீர் அவரிடம் “இனிமேல் நீங்கள் ஹீரோவாக நடிக்காதீர்கள். இதுபோல குணச்சித்திர வேடம் அதிகமாக வரும். அதில் நடியுங்கள் எனக் கூறியுள்ளார். ஆனால் அமீர் பேச்சைக் கேட்காத சரவணன் ஹீரோவாக சில படங்களில் கமிட் ஆகியுள்ளார். ஆனால் அந்த படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகி அவருக்கு பெரிய வெற்றியைப் பெற்று தரவில்லை. அதனால் பருத்திவீரனின் வெற்றியை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் வாய்ப்புகளை நழுவ விட்டுள்ளார் சரவணன் என ஒரு நேர்காணலில் இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வள்ளலாரைப் போல நம்மிடையே திகழ்ந்தவர் விஜயகாந்த்… இயக்குனர் அமீர் வெளியிட்ட அறிக்கை!