Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் இணையும் சந்தானம் ராஜேஷ்… திருப்புமுனையாக அமையுமா?

மீண்டும் இணையும் சந்தானம் ராஜேஷ்… திருப்புமுனையாக அமையுமா?
, வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (10:01 IST)
இயக்குனர் எம் ராஜேஷ் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி படமாகக் கொடுத்து வருகிறார்.

இயக்குனர் ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று அவரை முன்னணி இயக்குனராக்கின. அந்த படங்களின் வெற்றிக்கு எல்லாம் பக்கபலமாக இருந்தவர் சந்தானம். ராஜேஷின் எல்லா படங்களிலும் சந்தானத்தின் நகைச்சுவைக் காட்சிகள் தனிக்கவனம் பெற்றன.

ஆனால் ஒரு கட்டத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பின்னர் ராஜேஷோடு கூட்டணி அமைக்கவில்லை. இதற்கிடையில் ராஜேஷின் திரைப்படங்களும் தேய்வழக்காகி தோல்வியை சந்தித்தன. சந்தானத்தின் படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்போது இருவரும் இணைந்து ஒரு படத்தை ஆரம்பிக்க உள்ளனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி இணைவதால் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவுக்கு ரெட் கார்டு நீக்கம்; படப்பிடிப்பு தொடக்கம்! – ரசிகர்கள் மகிழ்ச்சி!