Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்கக் கட்டிடம்: ரூ.40 கோடி கடன் பெற தீர்மானம் -விஷால்

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (14:26 IST)
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.40 கோடி கடன் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது  என்று நடிகர் விஷால்  தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67 வது பொதுக்குழு கூட்டம் இன்று நடிகர் நாசர் தலைமையில்  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது, அதன்படி இன்று  காலையில் கூட்டம் தொடங்கியது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

நடிகர் விஷால் கூறும்போது,

''நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்காக ரூ.40 கோடி கடன் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தலில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். சங்கத்தின் அடுத்த பொதுக்குழு கூட்டம்  நடிகர் சங்கக் கட்டிடத்தில் நடைபெறும் ''என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பேசிய நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவருமான நாசர்,  ‘’நடிகர் சங்க கட்டிடம் இந்த ஆண்டு நிறைவேறும், தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லை….எனவும்,   நடிகர் சங்க கட்டிட கனவு இந்த ஆண்டு நிச்சயமாக நிறைவேறும்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments