Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூத்த நடிகர் ’வெற்றி விழா’ சலீம் கௌஸ் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

மூத்த நடிகர் ’வெற்றி விழா’ சலீம் கௌஸ் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்
, வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:13 IST)
நடிகர் சலீம் கௌஸ் இன்று உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.

வெற்றி விழா படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் சலீம் கௌஸ். பெரும்பாலும் அவர் திரை வாழ்க்கை முழுவதும் வில்லன் வேடங்களையே ஏற்று நடித்த அவர் பல முத்திரைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திருடா திருடா, சின்னக் கவுண்டர், வேட்டைக்காரன் ஆகிய படங்களில் இவரின் வேடம் பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில் 70 வயதாகும் சலீம் கௌஸ் இன்று உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். ரசிகர்கள் அவருக்கு சமூகவலைதளங்கள் மூலமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழம்பெரும் நடிகர் சலீம் கவுஸ் உடல்நல குறைவால் காலமானார்