Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வினுசக்கரவர்த்தி மறைவு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-விஜயகாந்த் இரங்கல்

, வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (06:10 IST)
பழம்பெரும் வில்லன், நகைச்சுவை, குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி நேற்று உடல்நலம் காரணமாக காலமானார் அவருடைய மறைவுக்கு ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



 


நடிகர் வினுசக்கரவர்த்தி மறைவுச் செய்தி அறிந்ததும், ரஜினிகாந்த். தனது டுவிட்டரில் கூறியபோது, 'வினுசக்கரவர்த்தியின் ஆன்மா சாந்தி அடையட்டும். அவருடைய குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறியுள்ளார். ரஜினியுடன் குரு சிஷ்யன், மனிதன், சிவா, ராஜாதி ராஜா, அண்ணாமலை, அருணாச்சலம் உள்ப்ட 25 சூப்பர் ஹிட்'ஹிட்' படங்களில் வினுசக்கரவர்த்தி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் , நடிகர் வினுசக்கரவர்த்தி மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். திரையுலகில் தனி முத்திரை பதித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கலையுலகில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருந்தார். நண்பர் வினுசக்கரவர்த்தி, விஜயா மருத்துவமனையில் இருக்கும் பொழுது நான் நேரில் சென்று நலம் விசாரித்தேன். அவரது இழப்பு குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'பாகுபலி 2' படம் எப்படி? நெட்டிசன்கள் கருத்து