Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிவாரண பணிக்காக திருமணத்தை தள்ளி வைத்த நடிகர்

Advertiesment
நிவாரண பணிக்காக திருமணத்தை தள்ளி வைத்த நடிகர்
, செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (07:57 IST)
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கான நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் பிரபல மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளை தன் திருமண வேலைகளை நிறுத்திவிட்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
விஜய் நடித்த  'தலைவா' மற்றும் விஷால் நடித்த 'ஆம்பள' போன்ற தமிழ்ப் படங்களிலும் ஒருசில மலையாள படங்களிலும் நடித்த நடிகர் ராஜீவ் பிள்ளைக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவருடைய திருமணத்திற்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், திருமண வேலைகளை பார்ப்பதை நிறுத்திவிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, நிவாரண முகாம்களில் சேர்க்கும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு நடிகர் ராஜீவ் பிள்ளை ஈடுபட்டு வருகின்றார். 
 
webdunia
மேலும் தனது திருமணத்தை ஆடம்பரமாக நடத்த முதலில் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது எளிமையாக திருமணத்தை முடித்துவிட்டு மீதமான பணத்தை வெள்ள நிவாரண நிதியாக கொடுக்கவிருப்பதாகவும் நடிகர் ராஜீவ் பிள்ளை தெரிவித்துள்ளார். ராஜீவ் பிள்ளையின் இந்த மகத்தான சேவைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் இதுவரை சின்னச்சின்ன வேடங்களில் மட்டுமே நடித்து வந்த ராஜீவ் பிள்ளையை பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்பார்த்தது போலவே ஐஸ்வர்யாவை காப்பாற்றிய யாஷிகா: இது நியாயமா பிக்பாஸ்?