Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் வாழ்த்துகள் கூறிய நடிகர் ரஜினிகாந்த்

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (10:07 IST)
இன்று தமிழர் திருநாளாம் தை முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில் உடல்நலக் கோளாறு காரணமாக தனது அரசியல் முடிவை மாற்றிக் கொண்டார்.

இதுகுறித்து அவர் விரிவான விளக்கம் அளித்த நிலையிலும் அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென சமீபத்தில் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் தான் திட்டவட்டமாக இனி அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினிகாந்த் கூறிவிட்டார்.

இருப்பினும் ரஜினிகாந்த் குறித்தும் அவரது அரசியல் வருகை குறித்து தொடர்து பல்வேறு பிரபலங்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த வருடம்  கருத்து வேறுபாடு காரணமாக விலகிய கராத்தே தியாகாராஜன், ரஜினியின் நண்பராவார். அவர் பாஜக கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.ஆனால் தான் அக்கட்சில் இணையவில்லை. ஆனால் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தருவேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள். எனத் தெரிவித்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments