Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிளாக்பஸ்டர் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் – இயக்குனர் யார் தெரியுமா?

பிளாக்பஸ்டர் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் – இயக்குனர் யார் தெரியுமா?
, திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (16:18 IST)
ராம்சரண் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ராம்சரண், ஆதி, பிரகாஷ்ராஜ் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் ரங்கஸ்தலம். பீரியட் படமாக உருவான அதில் ராம்சரண் காது கேளாதவராக நடித்திருந்தார். இந்த படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மிகப்பெரிய வெற்றி பெற்று 250 கோடி ரூபாய் வசூல் மழை பொழிந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்க லிங்குசாமியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. மற்ற நடிக நடிகைகள் விவரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பப்ளிசிட்டி தேடிய மீரா மிதுனுக்கு நேர்ந்தது என்ன! – இன்ஸ்டாகிராமில் பாலோயர்கள் எண்ணிக்கை….?