Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தரும் லாரன்ஸ்!

Ragava Lawrences
Webdunia
செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (17:47 IST)
தமிழ் திரையுலகில் கடின உழைப்பாலும் தன் திறமையாலும் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக,  சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார்.
 

 
அந்த வரிசையில் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. லாரன்ஸ் ஒரு நல்ல நடிகர் இயக்குனர் என்பதையும் தாண்டி நல்ல மனிதரும் கூட அந்த வகையில், தனது படங்களில் டான்ஸில் ஆர்வம் கொண்ட மாற்றுத்திறனாளிகளை நடிக்க வைப்பது, பல திறமைகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளை தனது படங்களின் மூலம் வெளிக்காட்டுவது, திருநங்கைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுப்பது உள்ளிட்ட உதவிகளை செய்வார். 
 
இந்நிலையில் சமீபத்தில் காஞ்சனா 3 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய லாரன்ஸ் திருநங்கைகளுக்கு  ஒரு அற்புதமான பரிசு காத்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் சென்னைக்கு அருகே உள்ள மீன்ஜூரில் வீடு கட்ட நிலம் ஏற்பாடு செய்துள்ளார், மேலும் அங்கு வீடுகள் கட்டித்தரப்படும்  எனவும், திருநங்கைகள் சமூகத்திற்கு அந்த வீடுகள் நன்கொடையாக கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய நடிகையின் சகோதரி.. குவியும் பாராட்டுக்கள்..!

‘மார்க்கெட் இல்லாத ஹீரோவுக்கு நான் ஹிட் கொடுத்தேன்.. ஆனால் அவர்’ – சுந்தர் சி ஆதங்கம்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… டிரைலர் & பாடல் ரிலீஸ் அப்டேட்!

பிரியங்காவின் கணவர் வயது இவ்வளவுதானா? வயதானவர் என நினைத்து விட்டோமே..!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் ஃபோட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments