Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தயவு செய்து உதவி செய்ய முன் வாருங்கள் - நடிகர் பிரசாந்த் வேண்டுகோள்

Advertiesment
வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தயவு செய்து உதவி செய்ய முன் வாருங்கள் - நடிகர் பிரசாந்த் வேண்டுகோள்

J.Durai

, திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (18:46 IST)
பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட படக் குழுவினர் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
 
அப்போது பேசிய நடிகர் பிரசாந்த்......
 
அந்தகன் திரைப்படம் பார்வையற்ற பியானோ கலைஞர் பற்றிய இசை சார்ந்த படம் என்றும் அதேசமயம் மர்மம் நிறைந்த சுவாரஸ்ய அம்சங்கள் பொருந்திய படம் என்றும் கூறினார்.
 
விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.
 
இந்த திரைப்படம் ரீமேக் படம் இல்லை  ரீமெட் படம் 110 சதவீதம் தமிழ் படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும்.
 
தற்போது அந்தகன் திரைப்படம் 400 திரையரங்குகள் வரை வெளியாக உள்ளது.
திரையரங்குகளில் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.
 
ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டது
குறித்த கேள்விக்கு....
 
கடந்த ஓராண்டு காலமாக ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறேன்.
 
தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் ஹெல்மெட் அணிவது குறித்த முக்கியத்துவம் தற்போது வைரலாகி வருகிறது. 
 
வயநாட்டில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன் என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேச்சுரல் ஸ்டார் நானியின் 'தசரா" திரைப்படம்,6 ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றது!!