Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணையும் ஆதிக்கின் மாமனார்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணையும் ஆதிக்கின் மாமனார்!

vinoth

, சனி, 5 அக்டோபர் 2024 (11:04 IST)
சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் இடையே இடைவெளி எடுத்துக்கொண்ட அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இதில் விடாமுயற்சி ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் குட் பேட் அக்லி ஷுட்டிங் இரண்டு கட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்போது ஸ்பெயினில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் அஜித்துடன் இணைந்து ஏற்கனவே பில்லா மற்றும் அசல் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டம் என் கையில் படத்துக்கு காட்சிகள் அதிகரிப்பு… நடிகர் சதீஷ் வேண்டுகோள்!