அமெரிக்காவில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பாகுபலி கதாநாயகன் பிரபாஸ், தன்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என மாறு வேடத்தில் சுற்றுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்திற்காக 5 வருடங்கள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார் நடிகர் பிரபாஸ். தற்போது படம் வெளியாகி ரூ. 1400 கோடிக்கு மேல் வசூலாகிவிட்டது. இந்த படத்திற்கு பின் சாஹோ என்ற படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் அமெரிக்காவில் தொடங்குகிறது.
இதனால், அமெரிக்கா சென்றுள்ள பிரபாஸ், ஓய்விற்கு பின் சாஹோ படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்களிடம் அவர் பிரபலமாகிவிட்டார். இது அமெரிக்காவில் தொடர்கிறது. எங்கு சென்றாலும், அவரை சிலர் அடையாளம் கண்டு கொள்கிறார்களாம். இது அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தவே, தற்போது அமெரிக்க வீதிகளில் மாறுவேடத்தில் சுற்றி வருகிறாராம் பிரபாஸ்...
பிரபலம்னாலே பிராப்ளந்தான் போலிருக்கிறது.