Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘விஜய் அழைத்தாலும் அவர் கட்சியில் சேரமாட்டேன்’… நடிகர் பார்த்திபன் அளித்த பதில்!

vinoth
வியாழன், 30 ஜனவரி 2025 (07:22 IST)
வித்தியாச இயக்குனர் பார்த்திபன் கடந்த 2023 ஆம் ஆண்டு இரவின் நிழல் என்ற திரைப்படத்தை ஒரே ஷாட்டாக எடுத்து வெளியிட்டார். அந்த படம் அந்த சிறப்பம்சத்தோடு வெளியானாலும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் இயக்கியுள்ள டீன்ஸ் என்ற படம்  சென்ற ஆண்டு வெளியானது. அதுவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதையடுத்து தன்னுடைய அடுத்த படமான ’54 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்ற திரைப்படத்தை இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்குக்கு ஒத்துழைக்குமாறு அவர் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் விஜய்யின் அரசியல் பற்றி பேசியுள்ளார். அதில் “ஜனநாயக நாட்டில் யார்வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அது அவரவர் உரிமை. விஜய் இரண்டு மேடைகளில்தான் பேசியுள்ளார். ஆனால் அதில் அவர் எந்த தவறும் இல்லாமல் பேசியது ஆச்சர்யமாக இருந்தது. விஜய் அழைத்தாலும் அவர் கட்சியில் நான் சேரமாட்டேன். ஏனென்றால் என்னுடைய அரசியல் என்பது தற்போது இருப்பது இல்லாமல் வேறொரு மாற்றம் வரவேண்டும். அது என்னால் இப்போது முடியுமா என்றால் என் கவனம் முழுவதும் சினிமா மேல்தான் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’.. மாஸ் டீசர் வீடியோ ரிலீஸ்..!

பீச்சில் கவர்ச்சி உடையில் ஃபோட்டோஷூட் நடத்திய திவ்யபாரதி!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோ ஆல்பம்!

கேம்சேஞ்சர் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

எனக்கு இன்னொரு பேரு இருக்குது.. சட்டமன்றத்தில் முழங்கிய ரவி மோகன்.. வீடியோ வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments