Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனது புதிய படத்தின் தலைப்பை அறிவித்த இயக்குனர் பார்த்திபன்!

தனது புதிய படத்தின் தலைப்பை அறிவித்த இயக்குனர் பார்த்திபன்!

vinoth

, திங்கள், 22 ஜனவரி 2024 (08:04 IST)
வித்தியாச இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும் பார்த்திபனின் வித்தியாச முயற்சி ரசிகர்களைக் கவர்ந்தது.

இதையடுத்து தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் பார்த்திபன். இந்த படத்தில் அவர் டீனேஜ் வயது இளைஞர்களின் வாழ்க்கையை சொல்ல உள்ளாராம். படத்துக்கு கேவ்மிக் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் பார்த்திபனே தயாரிக்கிறார். டி இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ஆங்கிலத்தில் TEENZ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒரு சாகச திரில்லர் படமாக இந்த படம் இருக்கும் என டைட்டில் டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் 51 படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!