Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் இருந்து நடிகர் நிகிலின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது!

J.Durai
சனி, 17 ஆகஸ்ட் 2024 (13:04 IST)
நடிகர் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் படத்தில் நடித்துள்ள நடிகர் நிகிலின் கதாபாத்திரத்தை வெளியிட்டுள்ளது.
 
இது குறித்து இயக்குநர் மகிழ் திருமேனி நிகில் கூறும்போது.......
 
திறமையான புதிய நடிகர்கள் கிடைப்பது ஒரு இயக்குநருக்கு மகிழ்ச்சியான விஷயம். அவர்களின் திறமையை மற்றவர்கள் பாராட்டும்படியான கதாபாத்திரத்தில் பெரிய திரையில் கொண்டு வருவது எங்களுக்கும் பெருமையான தருணம்தான். ’விடாமுயற்சி’ படத்தில் இளம் திறமையான நடிகர்கள் பலர் பணிபுரிந்துள்ளனர். நிகில் தனது வாய்ப்பை இந்தப் படத்தில் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். நிகிலை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்
 
இந்தக் கதாபாத்திரத்திற்காக தனது ஆன்மாவைக் கொடுத்து நடித்துள்ள நிகிலுடைய நடிப்பு நிச்சயம் பாராட்டப்படும். நான் முன்பே குறிப்பிட்டது போல், நடிகர்களை தேர்வு செய்யும் விஷயத்தில் அஜித்குமார் தலையிடுவதில்லை. தனது கதாபாத்திரத்திற்காக நிகில் கொடுத்த அர்ப்பணிப்பு மற்றும் அவரது நடிப்பைப் பார்த்த பிறகு அஜித்குமார், நிச்சயம் நிகிலின் நடிப்பு பார்வையாளர்களால் பேசப்படும் என்று பாராட்டினார் என்றார். 
 
படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது, விரைவில், அடுத்தடுத்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் அறிவிப்புகளை படக்குழு வெளியிட உள்ளது. 
 
த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார்.மற்ற நட்சத்திர நடிகர்கள் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, ரவி ராகவேந்திரா, சஞ்சய், தஸ்ரதி, ரம்யா, காசிம், ஜவன்ஷிர், ரஷாத் சஃபராலியேவ், விதாதி ஹசனோவ், துரல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  
 
சன் டிவி சாட்டிலைட் உரிமையைப் பெற்றுள்ளது மற்றும் நெட்ஃபிலிக்ஸ் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் திரையரங்குக்கு பிந்தைய ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments