Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது - சதுரங்க வேட்டை நட்ராஜ் பேட்டி

ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது - சதுரங்க வேட்டை நட்ராஜ் பேட்டி
, திங்கள், 29 மே 2017 (11:44 IST)
சதுரங்க வேட்டை படத்தின் மூலம் பலரையும் கவர்ந்த நடிகர் நட்ராஜ், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
கடந்த 19-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி “இங்கே சிஸ்டம் சரியில்லை. நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக  இருங்கள்” என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார். இதனால் அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 
எனவே, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதுபற்றிய செய்திகளையே ஊடகங்கள் தற்போது முன்னிறுத்தி வருகின்றன.
 
இந்நிலையில், சதுரங்க வேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகர் நட்ராஜ், இதுபற்றி கருத்து தெரிவித்த போது “ இவர் இதுக்குதான் லாயக்கு என எதையும் கூற முடியாது. அரசியலுக்கு வருவதும், வராமல் போவதும் அவரின் தனிப்பட்ட விருப்பம். அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அவர் வந்தால் நன்றாக இருக்கும் என பலர் நினைக்கின்றனர். அதில் நானும் ஒருவன்” என அவர் பதிலளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு இயக்குனரின் காதல் டைரி