Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முத்தக் காட்சி பற்றிய கேள்விக்கு நடிகர் நானி பதில்!

hai nanna
, செவ்வாய், 17 அக்டோபர் 2023 (21:05 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி. இவர். நான் ஈ, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் தசரா என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில்,  இயக்குனர் சவுரவ் இயக்கத்தில், நானி மற்றும் மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹாய் நான்னா. இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் வெளியாகி வைரலானது.

இப்பட செய்தியாளர் சந்திப்பின்போது, முத்தக் காட்சி பற்றிய கேள்விக்கு  நானி பதிலளித்துள்ளார்.

அதில்,  ''என்னுடைய எல்லா படங்களிலும் முத்தக் காட்சிகள் இடம்பெறுவதில்லை. கதைக்கு முத்தக் காட்சி முக்கியம் எனில் அதை நான் தடுக்க முடியாது.  இதுபோன்ற காட்சிகளில் நடிப்பது என்னுடைய விருப்பமில்லை. அது இயக்குனர்களின் விருப்பத்தில்தான் உள்ளது. அதில் நான் தலையிடுவதில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நகைக் கடை திடீர் மூடல் ...சுமார் 100 கோடிக்கு மேல் வரை மோசடி ?