Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மரணம்.. திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி..!

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (07:52 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை காலமானதை அடுத்து திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்து வருகின்றனர். 
 
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் மயில்சாமி. அவர் இன்று காலை திடீரென காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர பாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார் என்பதும் அவர் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மறைந்த மயில்சாமிக்கு 57 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை 3:30 மணி அளவில் நெஞ்சு வலி காரணமாக சுயநினைவு இழந்ததாகவும் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் உயிர் பிரிந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில மணி நேரங்களில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments