Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரிமுத்துவின் மறைவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை… எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் இரங்கல்!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (14:40 IST)
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான குணச்சித்திர நடிகராக இருந்து வரும் மாரிமுத்து இன்று காலை திடீர் மாரடைப்பால் இயற்கை எய்தினார். நடிகராக அறியப்படும் மாரிமுத்து கண்ணும் கண்ணும் மற்றும் புலிவா என இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார்.

ஆனால் அதிலெல்லாம் அடையாத புகழை அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலமாக பெற்றார். அந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதபாத்திரத்தில் நடிக்க, அந்த கதாபாத்திரம் வைரலானது.

இந்நிலையில் அவரின் மறைவு குறித்து பேசியுள்ள எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் “அவரின் மறைவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. டப்பிங்கை முடித்துவிட்டு ஷூட்டிங் வருவதாக சொன்னார். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்து இப்படி ஆகியிருந்தால் அது வேறு. இது அவரின் குடும்பத்தினர் மற்றும் எதிர்நீச்சல் சீரியல் குழுவினருக்கு மிகப்பெரிய இழப்பு” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

சச்சின் ரி ரிலீஸுக்கு வெற்றி விழா… 10 மடங்கு லாபம்- தயாரிப்பாளர் அறிவிப்பு!

விமல் படத்தை இயக்கிய இயக்குனர் திடீர் மறைவு.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!

அஜித்தின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் ‘வீரம்’… இன்று வெளியாகிறது டிரைலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments